Monday, February 8, 2021

தன்னேர் இலாத தமிழ் 12 ஆம் வகுப்பு இயல் 1 செய்யுள்

                                   தன்னேர் இலாத தமிழ்






ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி 

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள் 

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது 

தன்னேர் இலாத தமிழ்! * 


பா வகை : நேரிசை வெண்பா 

பாடலின் பொருள்:   மக்களால் போற்றப்பட்டு , உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் பு ற இ ரு ளை அகற்றுவது ஒன்று. பொதிகை மலை யில் தோன்றி, சான்றோர்கள் தொ ழ ப்பட் டு , மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது இன்னொன்று. இருளைப் போக்கும் இவ்விரண்டில் ஒன்று ஒளிர்கின்ற கதிரவன்; இன்னொன்று தனக்கு நிகரில்லாத தமிழ்.

No comments:

Post a Comment

IIT-Madras invites applications second batch of online data science programme, JEE scores not needed

IIT-Madras invites applications second batch of online data science programme, JEE scores not needed As a part of the application process, ...